‘தாய்வீடு’ ஜூன் மாத இதழில்…

A.Dakshinamurthy_Drawing.jpg

கனடாவிலிருந்து வெளியாகும் “தாய் வீடு” என்னும் திங்களிதழின்  ஜூன் மாத இதழில் பேராசிரியர் அ. தட்சிணாமூர்த்தியைப் பற்றிய ஒரு சிறப்புப்பகுதி இடம்பெற்றுள்ளது.

அதில், “அறிஞர் தட்சிணாமூர்த்தியால் பெருமை பெறும் தொல்காப்பியர் விருது” என்ற தலைப்பில் வின்ட்சர் பல்கலைக்கழகச் சமூகவியல், மானுடவியல் துறையின் பேராசிரியரும் கவிஞருமான முனைவர் சேரனும் உருத்திரமூர்த்தியும், “அருவித் திளைப்பு” எனும் தலைப்பில் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைப் பேராசிரியர் முனைவர் பா. மதிவாணனும் அவரைப்பற்றித் தலைக்கொரு கட்டுரையை எழுதியுள்ளனர். 1987-இல் “தமிழிலக்கிய ஆய்வுக்கோவை(பாகம் II)” – இல் வெளியான பேராசிரியர் தட்சிணாமூர்த்தியின் “சங்க இலக்கியங்களும் திணைக் கலப்பு மணமும்” எனும் ஆய்வுக்கட்டுரையொன்று இவ்விதழில் மீண்டும் வெளியாகியுள்ளது. இது அவர் வெளியிட்ட “தமிழியற் சிந்தனைகள் (அகல் பதிப்பகம், 2003)” எனும் நூலிலும் இடம்பெற்றுள்ளது. இந்தக்கட்டுரை பேராசிரியர் வ. சுப. மாணிக்கனார், தமது “தமிழ்க் காதலில்”, “சங்கத்தமிழ்ப் பாடல்களில் திணைக்கலப்பு மணம் இருந்ததற்கான சான்றுகள் உண்டு” என்று, வெளியிட்ட கருத்திற்கு மறுப்பாக அமைந்தது.

இந்தப்பகுதியை, PDF- வடிவில் இங்கே படிக்கலாம்: அ. தட்சிணாமூர்த்தி (தாய்வீடு: சிறப்புப்பகுதி)

Advertisements

Tolkappiyar Viruthu(2015)/தொல்காப்பியர் விருது(2015)

Dr. A. Dakshinamurthy received the Indian Presidential Award for lifetime achievement in Classical Tamil, the Tolkappiyar Viruthu from the President of India, Mr. Pranab Mukherjee on 9th May 2017 at Rashtrapati Bhavan, New Delhi.

இந்திய அரசின் செம்மொழி நிறுவனம் வழங்கும் செம்மொழித்தமிழுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதாகிய தொல்காப்பியர் விருது(2015) முனைவர். அ. தட்சிணாமூர்த்திக்கு  வழங்கப்பட்டது. இதனை மே 9 2017 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜி,  குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அவருக்கு வழங்கிச் சிறப்பு செய்தார்.

அறிஞர் அ. தட்சிணாமூர்த்திக்கு தொல்காப்பியர் விருது (2015)- வேந்தர் தொலைகாட்சி செய்திகள்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வழங்கும் குடியரசுத்தலைவர் விருதாகிய தொல்காப்பியர் விருது(2015) அறிஞர் அ. தட்சிணாமூர்த்திக்கு வழங்கப்படுகிறது. அது பற்றிய செய்தி வேந்தர் தொலைகாட்சியில்

Dr. A. Dakshinamurthy receiving G. U. Pope Translation Award(2016)

எஸ். ஆர். எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ்ப்பேராயம் விருதுகள் வழங்கும் விழாவில் பத்துப்பாட்டின் ஆங்கில மொழிபெயர்ப்பாகிய, “Pattuppattu In English – The Ten Tamil Idylls” எனும் நூலுக்காக முனைவர். அ. தட்சிணாமூர்த்திக்கு , ‘ஜி. யு. போப் மொழிபெயர்ப்பு விருது’ வழங்கப்படும் காணொளி

Dr.Dakshinamurthy Ayyaswami receiving SRM University – Thamizh Perayam’s ‘G. U. Pope Translation Award(2016)’ for the translation of the ancient Tamil Classic Patthuppaattu titled, ‘Pattuppattu In English – The Ten Tamil Idylls’. Date & Venue: 18/Feb/2017, SRM University, Kattankulathur

பேரா. தட்சிணாமூர்த்திக்கு ந. மு. வேங்கடசாமி நாட்டார் விருது

கரந்தைத் தமிழ்ச்சங்கமும் திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகமும் இணைந்து நடத்திய உரைநடைத்தமிழ் அனைத்துலகப் பதினான்காவது ஆய்வு மாநாட்டில் முனைவர் அ. தட்சிணாமூர்த்தி அவர்களின் தமிழ்ப்பணியைப் பாராட்டி அவருக்கு “ந. மு. வேங்கடசாமி நாட்டார் விருது” வழங்கப்பட்டது. விருது வழங்கியோர் முனைவர் க. பாஸ்கரன், மாண்புமிகு துணைவேந்தர், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் மற்றும் மாண்புமிகு ஏ. நடராசன், இந்தியத்துணைத்தூதர், யாழ்ப்பாணம்.  நாள்: 23.07.2016 இடம்: கரந்தைத் தமிழ்ச்சங்கம்.